முன்., அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை!!

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.