Coimbatore Crime News: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் அருகே மொத்த ஏல காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. அங்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் மலைக்காய்கறிகள் மற்றும் பூண்டு போன்றவை இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கறி மண்டியில் பூண்டி மண்டி வைத்து நடத்தி வருபவர் தான் முகமது சபிக். இவர் நேற்று இரவு வழக்கம் போல மண்டி பணிகளை முடித்து விட்டு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து நள்ளிரவு இவரது மண்டியின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்பநபர் ஒருவர் மண்டி அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்ததுடன், தனது தடயங்களை மறைக்க மண்டி அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளான். இந்த தீ விபத்தில் மண்டி அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான இடம் சம்பந்தமான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்ததுடன் கம்யூட்டர், மடிக்கணி உள்ளிட்டவையும் எரிந்து நாசமாகியுள்ளது.


மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி


இன்று வழக்கம் போல் மண்டியை திறந்து பார்த்த போது தான் இந்த திருட்டு சம்பவம் குறித்து தெரியவந்தது. இதனை அடுத்து மண்டி உரிமையாளர் நடந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட போது அதில் முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளாப் பெட்டியை திறந்து அதில் இருந்த இரண்டு லட்சம் பணத்தை கொள்ளையடித்ததுடன் தீ வைத்து விட்டு சென்றது பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்


மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ