நடைபெறாத உள்ளாட்சி தேர்தலுடன் இணைந்தது இடைத்தேர்தல்!
தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கு 6 மாதகாலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் OP ராவத் தெரிவத்துள்ளார்
தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கு 6 மாதகாலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் OP ராவத் தெரிவத்துள்ளார்
எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இருந்தாலோ, மேல்முறையீடு செய்தும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டாலோ அவர்களின் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த AK போஸ், திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மு கருணாநிதி அவர்கள் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இன்றை தீர்ப்பின் எதிரொலியாக ஏற்கனவே காலியாக உள்ள இவ்விரு தொகுதிகளுடன், பதவி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களின் 18 தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்படும். அதன்படி இந்த 20 தொக்குதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடனோ அல்லது அதற்கு முன்போ இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழ சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத், தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களின் 18 தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்!