திமுக மீது மத்திய மாநில அரசுகள் பழி சுமர்த்த பார்க்கிறது என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதுமுண்டு அது தான் அரசியல், எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமர்த்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளும்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது.


இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரிதுறையின் சோதனை நடத்திய செயல்.


இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்களை சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள்.


இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடுபோவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டுயிருக்கிறது.


எங்கள் - வீடு கல்லூரி சோதனைகளில் எதுவும் சட்டத்திற்கு புறம்பான பொருகள் எதுவும் கைபற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே எதாவது பொருள்களை வைத்துவிட்டு இவர்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதாக, அவைகளைக்காட்டி எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.


இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர் குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும்." என குறிப்பிட்டுள்ளார்.