கஜா புயல் நிவாரண பணிக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடியினை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிறகு நிவாரண உதவியாக ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பிரதமரிடம் சென்று கோரிக்கை வைத்தார். 


இந்நிலையில் தற்போது மத்திய அரசின் நிவாரண நிதியில் இருந்து மின்சார சீரமைப்புக்காக முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக் கம்பங்கள் சரி செய்யும் பணி மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. மின் இணைப்பு பணிகளும் விரைவில் சீர் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.