அகில இந்திய மகிளா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த மகிளா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மா கூறியதாவது: 


விவசாயிகள் பிரச்னைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசை கைகாட்டுவது தவறு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரூ.77.200 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் இப்பொழுது உள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். 


தமிழக பெண்கள் குறித்து கேரள அமைச்சர் மணி பேசியது கண்டிக்கத்தக்கது. மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.


தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள பாஜக பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறது என்றும், தினகரன் கைது விவகாரத்தில் உண்மை வெளி கொண்டு வர வேண்டும்.


தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பெண்கள் போராட்டம் நடத்தும் நிலையில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.