சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியினை வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்வது குறித்து குடியரசுதலைவர் ஒப்புதலை பெற வேண்டுமென்று தமிழ்நாடு சட்டசபையில் 2006–ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


குடியரசுதலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்த கோரிக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 


பின்னர் 2012–ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதனையடுத்து தற்போது "ஏற்கனவே 1997, 1999–ம் ஆண்டுகளில் இதுபோன்ற கோரிக்கைகள் நிராகரிப்பட்டது. எனவே அதே முடிவையே மீண்டும் எடுப்பதாக" உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் இதுகுறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிவிட்டனர். 


இதனையடுத்து மீண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தே தீருவோம். தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வருவதை நீதிமன்ற அமர்வுதான் முடிவு செய்யும். தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.