புதுச்சேரி: மாநிலத்தில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள பலமுறை நிதியுதவி கோரிக்கை வைத்தும், அதற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காமல் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி (Puducherry) முதல்வர் நாராயணசாமி இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அவர்  முதல்வர் நாராயணசாமி (V. Narayanasamy) கூறுகையில், "கொரோனாவால் நாடு முழுவதும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று எப்படி பரவுகிறது, யார் மூலம் பரவுகிறது என்று மத்திய அரசு இதுவரை கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த தொற்றுக்கான மருந்தையும் இன்னும் கண்டுபிடுக்க முடியவில்லை. முதலில் கொரோனாவை ஒழிப்போம் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருந்தது. ஆனால், இப்பொழுது  கொரோனா நோய் தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மக்களிடம் கூறியுள்ளது. 


இதையும் படிக்கவும் | புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 25% உயர்வு - அரசாணை வெளியீடு


COVID-19 காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்கவும் பொருளாதாரத்தை  மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்துக்கு எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்.அதன் மூலம் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ முன்வரவில்லை. எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்கவில்லை. 


ஆதாவது ஜிஎஸ்டி, அரசின் திட்டங்களுக்கு நிதி ஆதாரம், அமைக்க 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரை நிதி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் நிதி எதையும் தரவில்லை. 


இதையும் படிக்கவும் | ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்க அனுமதிக்க வேண்டும்!


புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி சம்பந்தமாக மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நான் பேசியுள்ளேன். ஆனால் இதுவரை நிதியுதவி விவகாரமாக மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என முதல்வர் நாராயணசாமி (V. Narayanasamy) கூறினார்.