சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டில் அவர் கூறும் போது,  ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர்தான் காரணம்.  ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டது என்றார்.  மின்மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் என்எல்சி இல்லை என்றால் தமிழகம் இருளில் மூழ்கும் என அமைச்சர் பொய்யான தகவலை தெரிவிக்கிறார். என்எல்ஐ அடுத்த ஆண்டு தனியார் வசம் ஒப்படைக்க உள்ள நிலையில் அரசு கை கோர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆடு, மாடு, கோழி என.. எடப்பாடி பழனிச்சாமிக்கு குவியும் சீர்வரிசைகள்!


காவிரி டெல்டாவை மாவட்டங்களை அழிக்க மத்திய அரசு மிகப்பெரிய சூழ்ச்சி நடத்துகிறது, முதல்வர் இதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள 6 சுரங்க முகாம்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.   தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு MBCக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். இதில் வன்னியர் சமுதாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  பாமகவிடம் ஆட்சி இருந்தால் 6 மணி நேரத்தில் ஜாதி வாரியாக பணி ஒதுக்கீடு தகவலை எடுத்திருப்போம்; ஆனால் சமூக நீதி பேசும் அரசு சமூக நீதியை கடைப்பிடிப்பதில்லை, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் நேரடி ஐஏஎஸ் பதவி கடந்த ஆண்டுதான் முதல்முதலில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளது. 


மக்கள் தொகை அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உள் ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறும்போது, நீட் தேர்வு 100 சதவீதம் தேவையில்லை, தமிழகத்தில் கல்வியின் தரம் மிக குறைவாக உள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான பயிற்சி பள்ளிகளில் கிடைப்பது இல்லை; அரசு வழங்கும் பயிற்சியும் அரைகுறைதான்.  திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு 2 ஆண்டுகளாகியும் ஒன்றும் செய்யவில்லை என்றார்.  இதனிடையே நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு மிகவும் வரவேற்கதக்கது.  தமிழகத்தில் பல குற்றங்களுக்கு போதை பொருட்கள்தான் காரணமாக உள்ளது. அதனை முழுமையாக அரசு தடுக்க வேண்டும். மதுவால் அரசுக்கு வருவாய் கிடைப்பதாக அமைச்சர் பெருமையாக சொல்கிறார்; இது பெருமை அல்ல அரசுக்கு வெட்ககேடு என்றார்.  


திமுக ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு என்றார்கள், ஆனால் தற்போது 2 ஆண்டுகளில் ஒரு மதுக்கடையையாவது திமுக அரசு மூடி உள்ளதா என கேள்வி எழுப்பினர்.  தாய் மொழி படிக்காமல் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம்தான்; இந்த பெருமை திராவிட கட்சிகளுக்குதான் சேரும்.  தமிழகத்தில் எங்கே தமிழ் எனும் நிலைதான் உள்ளது, தமிழகத்தில் தற்போது மீண்டும் தமிழ் புரட்சி நடக்கிறது; அதிகாரத்தில் இருக்கும் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  பாமகவின் இலக்கு 2026 சட்டபேரவை தேர்தல்தான் அப்போது ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம்.  மே இறுதிக்குள் இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் சமூக நீதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.


மேலும் படிக்க | பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ