காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், திருநாவுக்கரசர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.


காவிரி வழக்கில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட பாரதீய ஜனதா துணை நிற்கும்.  காவிரியில் குறைக்கப்பட்ட நீரை திரும்பப் பெற சட்டப்படி நடவடிக்கை தேவை.  அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. என கூறினார்.


அனைத்து விதமான நதிநீர் பிரச்னைகளையும் சரி செய்ய ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்றும், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.