புதுடெல்லி: தமிழ் நாட்டின் தொன்மையான நாகரிகங்களுக்கு உதாரணமாக இருப்பது ஆதிச்சநல்லூர்.  இந்தத் தொல்லியல் களம் கிமு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தமிழகத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பெருமையை பறைசாற்றும் விதமாக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தின் ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார்.


இங்கிருந்து கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்கள், அமெரிக்க தொல்லியல் ஆய்வகத்தில் ஆராயப்பட்டு, கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டதில், ஒரு பொருள் கி.மு. 905வது ஆண்டை சேந்தது என்றும், மற்றொன்று கி.மு. 791ம் ஆண்டை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.


’உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ என தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் பற்றி பல ஆகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு நடத்தப்பட்ட 4வது கட்ட ஆய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தொடர்பாக மத்திய தொல்லியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிச்சநல்லூர் நாகரிகம் 2,950 ஆண்டுகளுக்கு முந்தையது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


Also Read | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS அட்டாக் DMK


அதையடுத்து 2020-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ’ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ எனநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்பிறகு ஆதிச்சநல்லூர் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்த பணிகள் முடங்கின. இந்த ஆண்டு பிப்ரவரி 26 முதல் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வாய்வு பணி, செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். 


தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் மாநிலங்களவையின் தி.மு.க உறுப்பினர் வில்சன் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, “தமிழகத்தில் உள்ள 412 நினைவுச் சின்னங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் பராமரிக்க, நடப்பு நிதியாண்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘ஆதிச்சநல்லூர்’ நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழகத்தில் 7 தேசிய நினைவுச் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.


”ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமையவுள்ள இடத்தை மத்திய தொல்லியல்துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். அவருடைய அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை, இந்தியாவில், 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க, அடையாளம் காணப்பட்டது, தற்போது அந்தப் பட்டியலில் ஆதிச்சநல்லூரும் இடம்பெற்றுள்ளது” எனப் பதிலளித்தார்.


தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இடங்களில் தள அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அவற்றை ‘சைட் மியூசியம்’ (site museum) என்று அழைப்பார்கள். அதாவது, அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் படியாக வடிவமைக்கப்படும். அதேபோல், ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும், இங்கே அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். மத்திய தொல்லியல் துறையின் உயர் அதிகாரிகள் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு, அருங்காட்சியகம் அமைக்கும் பணி மத்திய அரசின் ஒப்புதலுடன் துவங்கும்” என்று மத்திய அமைச்சர் பதிலளித்தார்.   


Read Also | Plus 2 Mark List: +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR