தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மீண்டும் அரசு அனுமதி!
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள்!!
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள்!!
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.
தமிழகத்தின் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதற்கட்ட பணியாக 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அமைக்கும் பணியை தொடங்கலாம் எனவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வன்மையாக கண்டித்து வரும் நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.