தெலுங்கானா மாநில ஆளுநர் ஆகிறார் தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்!
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்!
தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார். கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரை கவர்னராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமித்திருக்கிறார். இதன் மூலம் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றார்.
தெலங்கானா கவர்னர் பொறுப்பு குறித்து பேட்டியளித்த தமிழிசை, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கடினமான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.