புதுடெல்லி: பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு (Central Government) பல்டி அடித்துவிட்டது.   பேரறிவாளனை விடுவிப்பதில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரறிவாளனை விடுவிப்பதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் (Supreme Court) கூறியிருந்த நிலையில், அதற்கு நேற்று பதிலளித்த மத்திய அரசு, குடியரசு தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால் தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்ட மத்திய அரசு, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறிவிட்டது. 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.


Also Read | Real Estate துறைக்கு இந்த பட்ஜெட்டில் Good News or Bad News


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்பான தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் (Governor) எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். 


நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதோடு, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் (President) தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


Also Read | சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?


ஆனால், பேரறிவாளன் (Perarivalan) தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு இதுவரை எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றும், இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குள் அவர் முடிவை அறிவித்துவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த செய்தி தமிழக அரசியலில் சளசளப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் ஆளுநரின் முடிவு, மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுதுவதாக கருதப்படும் என்றும், அதனால் பேரறிவாளர் தொடர்பான வழக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Also Read | ‘இயேசு அழைக்கிறார்’ அலுவலகங்களில் IT Raid: வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு என நீளும் குற்றச்சாட்டுகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR