அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குமரி கடல் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புதுகோட்டை போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.