தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை  நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% ஆக குறைப்பு!!


இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது... தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.


மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.