இன்றைய வானிலை முன்னறிவிப்பு.. 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தென்மேற்கு பருவகாற்று காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் வடதமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடுமென தெரிவித்துள்ளது
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ALSO READ | பெண்களின் உரிமையைக் காக்க Supreme Court அளித்த மாபெரும் தீர்ப்பு!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இரணியல், பெரியாறு பகுதியில் தலா 5 செ.மீ., சித்தார், குளைச்சல் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.