12-ம் வகுப்பு பாட திட்டத்தில் மாற்றம்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
+2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல மாற்றங்களை கொண்டு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை, +2 பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது.
இதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாட வாரியாக மொத்தம் மதிப்பெண் 200-இல் இருந்து 100 ஆகா குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2:30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.