சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தல் செய்யும் நிகழ்வுகள் தற்போது தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் இன்று வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பார்சலில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவலின் அடிப்படையில், சென்னை விமான சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை தடுத்து நிறுத்தினர். போதைப்பொருள் உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், பெட்டி திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.


அதில் அட்டை பெட்டியில் ஒரு வாழ்த்து அட்டை மற்றும் இரண்டு பிளாஸ்டிக் பைகள் இருந்தன. “பிங்க் பனிஷர்” எம்.டி.எம்.ஏ அல்லது எக்ஸ்டஸி மாத்திரைகள் என அழைக்கப்படும் 994 இளஞ்சிவப்பு நிற மாத்திரைகள் இரண்டு பைகளில் இருந்தன.


இதன் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். வாழ்த்து அட்டையில் ரூ .6 லட்சம் மதிப்புள்ள 249 எல்.எஸ்.டி “லைசெர்ஜிக் ஆசிட் டைதிலாமைடு”( LSD “Lysergic Acid Diethylamide”)  முத்திரைகள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பாக்கெட் இருந்தது.


Also Read | தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்


பார்சலை பிரித்து பார்த்ததும், பார்சல் யாருக்கு வந்தது என்ற தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. புதுச்சேரியின் ஆரோவில்லுக்கு அருகிலுள்ள ஜே.எம்.ஜே மதர்லேண்டில் உள்ள முகவரிக்கு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. சென்னை மற்றும் கடலூரிலிருந்து சுங்க குழுக்கள் அந்த முகவரிக்கு சென்று தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. 


அந்த குறிப்பிட்ட முகவரியில் தங்கியிருந்த இரண்டு குடியிருப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அநத வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5.5 கிலோ கஞ்சா (Ganja) பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அந்த கஞ்சா ஆந்திராவின் குண்டூரிலிருந்து கொள்முதல் செய்ததாக தெரியவந்துள்ளது.


ஃப்ரீலான்ஸ் மியூரல் ஆர்ட்டிஸ்ட் திருநெல்வேலியைச் சேர்ந்த ரூபக் மணிகண்டன் (29) மற்றும் கோழி பண்ணையில் பணிபுரியும் லோய் வைகஸ் (28) ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Also Read | தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு IAS நியமனம்!


குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அலந்தூர் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.


இது தொடர்பாக ஜீ மீடியாவிடம் பேசிய சென்னை ஏர் சுங்க ஆணையாளர் ராஜன் சவுத்ரி, இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்று கூறினார். 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,200 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அஞ்சல் பார்சல் வழியாக ஸ்பெயினிலிருந்து வந்த மருந்துகளைத் தவிர, குற்றவாளிகளின் இல்லத்தில் இருந்த போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


994 “பிங்க் பனிஷர்” எக்ஸ்டஸி மாத்திரைகள், 249 எல்.எஸ்.டி முத்திரைகள் மற்றும் கஞ்சா என மொத்தம் 58.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் என்.டி.பி.எஸ் சட்டம், 1985 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Also Read | சங்கர் ஜிவால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையர்: உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR