சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் விலங்குகள் நல வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு விலங்குகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படக் காட்சிகளுக்கு அனுமதி, தடையில்லா சான்று, சர்க்கஸ் உள்ளிட்ட நிகழ்வுகளில் விலங்குகளை பங்கேற்கச் செய்லதற்கு அனுமதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், திடீரென இந்த அலுவலலம் ஹரியானாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விலங்குகள் நலவாரியச் செயலாளர் வெளியிட்டுள்ளார். 


ஹரியானாவில் பரிதாபாத் அருகே டெல்லி மற்றும் ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சீக்ரி என்ற கிராமத்திற்கு அலுவலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென உடனடியாகத் தெரியவில்லை. மேற்குறிப்பிட்டவற்றுக்கு அனுமதி பெற இனி புதிய முகவரியையே அணுக வேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரிய செயலாளர் அறிவித்துள்ளார்.


சென்னை திருவான்மியூரில் இயங்கி வந்த விலங்குகள் நல வாரியம் மார்ச் 8-ம் தேதி முதல் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் செயல்படும்.