சிக்னல் பிரச்னை; சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் தணிந்து 4000 என்ற எண்ணிக்கு குறைவாக புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
அதன்படி கொரோனா (Corona Spread) கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே (Southern Railways) அறிவித்தது. பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
'ALSO READ | Covid-19 பரவலை தடுக்க N95 முகமூடிகள் சிறப்பாக செயல்படுகிறது: இந்திய விஞ்ஞானிகள்!
இந்நிலையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிக்னல் பிரச்னையால் புறநகர் ரயில்சேவை 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்னல்கள் சரிவர இயங்காததால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கால தாமதம் காரணமாக பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ALSO READ | எச்சரிக்கை: கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ் மீன்கள் மூலம் பரவ வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR