சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கணவன் மனைவி, ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கி அவர் மீது சுடு தண்ணீர் ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர் மீது தாக்குதல்..


சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். பெயிண்டர் வேலையை செய்யும் அர்ஜுன் கடந்த ஆறாம் தேதி தனது வீட்டிற்கு மது அருந்திவிட்டு இரவு 11 மணிக்கு உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்றுள்ளார். அப்போது அர்ஜுனின் பக்கத்து வீட்டு வாசலில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. இதை அர்ஜுன் தான் இங்கு போட்டார் என்று எண்ணிய பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி (தனியார் பள்ளி ஆசிரியை) அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அர்ஜுனை ஆபாசமாக திட்டி அங்கிருந்து மரக்கட்டைகளால் அர்ஜுனனை தாக்கியுள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மது பாட்டில்களாலும் அர்ஜுன் தலையில் தாக்கியுள்ளார்.


மேலும் படிக்க | உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை..! சுட சுட தலைப்பு செய்திகளை இதோ!


மயக்கமடைந்த இளைஞர்..


கணவன்-மனைவி சேர்ந்து தாக்கியதில் அர்ஜுன் படிகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர், இரவு 11.30 மணியளவில் நன்றாக காய வைத்த சுடு தண்ணீரை ஊற்றியுள்ளனர்.


கணவனும், மனையும், கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை கொண்டு வந்து அர்ஜுன் மீது ஊற்றிவுடன் ஆர்ஜூன் துடிதுடித்து  அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  பின்னர் அர்ஜுனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அங்கு அர்ஜுனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடல் முழுவதும் 60% காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனை தாக்கிய மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீது சாதாரண பிரிவுகளின் கீழ் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ தனமாக நடந்து காெண்ட கணவன் மனைவி மீது போலீஸார் எந்த கைது நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 


“கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..”


பாட்டில்களால் தாக்கப்பட்டு, சுடுதண்ணீர் ஊற்றபட்ட நிலையில் அர்ஜுன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவரது தாயார், தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். அதனை தொடர்ந்து நேற்று இரவு மணிகண்டன் அவரது மனைவி ராஜி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | ராமநாதபுரத்தில் 12 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா - பரபரப்பு புகார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ