ராமநாதபுரத்தில் 12 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா - பரபரப்பு புகார்கள்

எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 15, 2023, 07:20 PM IST
  • எங்க மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியல
  • எங்களுக்கு எதுக்கு கவுன்சிலர் பதவி
  • 12 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா
ராமநாதபுரத்தில்  12 கவுன்சிலர்கள் கூண்டோடு  ராஜினாமா - பரபரப்பு புகார்கள் title=

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் சிக்கல், ஆண்டிச்சிகுளம், டொட்டப்பல்சேரி, தொட்டியாப்பட்டி, கழநீர் மங்கலம், மதினார் நகர், இ.சி.ஆர் காலனி உள்பட 9 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 12 வார்டுகளில் சுமார் 13 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். கடந்த ஒரு வருடமாக காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் தொடர்கிறது. கிராமத்திற்கு காவிரி குடிநீர் வசதிகோரி உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. 

மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

வீட்டு உபயோகத்திற்கு இங்குள்ள குளத்து நீரை பயன்படுத்தி வந்த நிலையில் கோடைக் காலத்தில் அதுவும் வற்றி விட்டது. இதனால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் கிராமத்திற்கு நிரந்தர குடிநீர் வசதி கேட்டு, ஊராட்சியின் 12 வார்டு கவுன்சிலர்கள், துணைத்தலைவர் நூருல் அமீன் தலைமையில் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதுகுறித்து ஊராட்சி மன்ற துணை  தலைவர் நூருல் அமீன்  கூறுகையில், ''சிக்கல் பஞ்சாயத்தில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு புதிய தொட்டி உள்ளது. 

ஆனால் முறையாக காவிரி கூட்டு குடிநீர் வராததால் தொட்டியில் ஏற்றி, தெருக்களுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை. மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத எங்களுக்கு பதவி எதற்கு?. மேலும், நாங்கள் மொட்டை அடித்து எங்களை எங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக போராட்டத்தில் களம் இறங்கினோம், ஆனால், அதை காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தடுப்பதில் மும்முரம் காட்டினார்கள். ஆனால், எங்கள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க எந்த ஒரு அரசுத்துறை அதிகாரிகளும் மும்முரம் காட்ட வில்லை என்பதால் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் எங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து விட்டோம்" என தெரிவித்தார். குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News