ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர் அருண்!
Chennai Police Commissioner: சென்னை எனக்கும் ஒன்றும் புதிது இல்லை, இங்கு எல்லா நிலையிலும் நான் பனிபுரிந்துள்ளேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர்பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். 110 ஆவது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் IPS இன்று மதியம் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுளார். அருண் ஐபிஎஸ் வகித்து வந்த சட்ட ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய காவல் ஆணையர் அருண், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன்
புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டிலும் சென்னையிலும் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. பொத்தம் பொதுவாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது. நடக்கக்கூடிய குற்றங்களை காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. காவலர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணி செய்தாலே குற்றங்கள் குறையும் என்றும் ரவுடிகளை பொறுத்தவரை அவர்களது மொழியிலேயே நடவடிக்கை இருக்கும் எனவும் கூறினார். மேலும், காவல்துறையில் உள்ள முறைகேடுகளையும் களையெடுக்க வேண்டும், ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் அவர் உயிருக்கு பாதிப்பு உள்ளது என காவல்துறைக்கு தெரியுமா தெரியாதா என விசாரிக்கப்படும்.
காவல்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் அவருடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே இங்கே குற்றங்கள் குறையும். அதேபோல போதைப்பொருள் விவகாரத்திலும் காவல்துறையில் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை சீராக்க வேண்டும், குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் நடந்த குற்றங்களின் பின்னணியை கண்டறிய வேண்டும். ரவுடிகளை ஒடுக்க வேண்டும் குறிப்பாக அவர்களுக்கு புரிகின்ற வகையில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை எடுப்போம். ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் குறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை. என்னை நம்பி பொறுப்பு கொடுத்துள்ள தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி என்று கூறினார்.
மேலும் படிக்க | சென்னையை நடுங்க வைத்த கொலைகள்! நடுங்க வைக்கும் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ