சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் அசுர பலத்துடன் வெற்றி பெற்று உள்ளது. இதில் அதிமுக 15 இடங்களிலும், அமமுக, பாஜக தலா ஒரு இடங்களிலும், சுயேட்டைகள் 5 இடங்களில் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக நேற்று பதவியேற்று கொண்டனர். மேலும் சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரின் மனதிலும் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே சென்னை மாநகராட்சி முதன் முறையாக தாழ்ந்தப்பட்ட பெண் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இதில் திருவிக நகர் 74வது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இவர் எம்.காம் முடிந்து உள்ள முதுநிலை பட்டதாரி. இவரது தாத்தா செங்கை சிவம் 40 ஆண்டுகாலம் திமுகவில் உறுப்பினராக இருந்தவர். அது மட்டுமில்லாது முன்னாள் எம்எல்ஏ , இவரது பேத்திக்கு இளம் வயதில் மேயராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.


மேலும் படிக்க: ஆதரவற்ற குழந்தையை அரவணைக்கும் பெண் போலீஸ்! வைரலான வீடியோ!



இதற்கு முன்பு 1957ம் ஆண்டு தாரா செரியன் முதல் பெண் மேயராகவும், 1971-72 வரை காமாட்சி ஜெயராமன் இரண்டாவது பெண் மேயராக பணியாற்றி உள்ளனர். 3வது முறையாக பெண் மேயராக பணியாற்றும் வாய்ப்பு இளம் தாழ்ந்தப்பட்ட பிரிவை சார்ந்த பிரியா அவர்ஙளுக்கு கிடைத்து உள்ளது.


அதேநேரத்தில் துணை மேயராக 169 வார்டில் வெற்றி பெற்ற சைதை மகேஷ்குமார் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. தென்சென்னைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அமைச்சர் மா சுப்ரமணியன் தீவிர ஆதரவாளர் என்ற வகையில் 169 வார்டில் வெற்றி பெற்ற மகேஷ்குமாருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க: இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம்


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21 மாநகராட்சிகளை கைப்பற்றி முழுமையான வெற்றி பெற்று உள்ளது. இதில் உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, சென்னை மாநகராட்சியில் 102 பெண்கள், 98 ஆண் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.



மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு ஆதிதிராவிடர் பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியீடு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR