தொடரும் மழையால் பள்ளிகளுக்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக விடுமுறை
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதைக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
காலை முதல் மழை பெய்து வருவதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மாலை 3.00 மணி வரை செயல்படுமாறு உத்திரவிடப் படுகிறது. மாணவர்களை மாலை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த படுகிறது என சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கையில் கூறியுள்ளார்.