சென்னை: புகழ்பெற்ற யூஎன்ஐ செய்தி நிறுவனத்தில் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். சென்னையில் உள்ள யூஎன்ஐ அலுவலகத்தில் 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், யூஎன்ஐ நிறுவனம் கடந்த 60 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை யூஎன்ஐ நிறுவனத்தின் தலைமைப் நிர்வாகியாக பணியாற்றிவந்த டி. குமார், நிறுவனம் சம்பளம் தராதது குறித்து சக பத்திரிகையாளர்களிடம் கடந்த சில நாட்களாக வருத்தத்துடன் பேசிவந்துள்ளார். ஆண்டுக்கணக்கில் சம்பளம் வராத நிலையில், தன்னுடைய சேமிப்பு அனைத்தும் கரைந்துபோய்விட்டதாகவும் கூறியுள்ளார். வயது ஐம்பதை கடந்துள்ள நிலையில் வேறு ஒரு நிறுவனத்திலும் பணியில் குறித்து சேர முடியாது என்றுகூறி வருத்தப்பட்டுள்ளார். 


இந்நிலையில், நேற்று (13.02.22) நூங்கம்பாக்கத்தில் உள்ள யூஎன்ஐ அலுவலகத்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


குமார் அவர்களின் இந்த முடிவு, பத்திரிகையாளர் சங்கங்கள் விழித்துக்கொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகிறது. இனியொரு பத்திரிகை நண்பர் இப்படிப்பட்ட முடிவை எடுக்காமல் தடுப்பது, பத்திரிகையாளர் சங்கங்களின் கடமை என்றே கருதுகிறது. 


மறைந்த குமார் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டையும், அவரோடு பணியாற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையையும் பெற்றுத்தர அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள மையம் அழைப்பு விடுக்கிறது. 


தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, யூஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும், அந்த நிறுவனம் தர வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது. 


தமிழக அரசு, குமார் அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR