சோஷியல் மீடியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய சென்னை பாஜக நிர்வாகி கைது!
Socil Media Harassement : சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது...
சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது. சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியப் பெண்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட பாஜக திறக்க மாவட்ட செயலாளர் கோகுல் நாயுடு என்பவரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
முகநூலில், Gokulnaidu எனும் பெயரில் உள்ள பக்கத்தில் இஸ்லாமிய பெண்களை தவறான முறையில் சித்தரித்து ஒரு பதிவு போட்டிருந்தார். இதில் இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்போது தான் முத்தலாக் ஹலாலாவில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழமுடியும் என்றும் இந்து சாமியாரின் மடியில் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துஉள்ளார்.
மேலும் படிக்க | முதல் டேட்டில் மறக்கக் கூடாதா 4 விஷயங்கள்... காதல் மலர இது ரொம்ப முக்கியம்!
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற மதவெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக மக்களை கலகம் செய்யும் வகையிலும் மதமோதலை தூண்டும் நோக்கத்தோடும் முகநூலில் பதிவு செய்து வரும் N.Gokul Naidu என்கிற பெயரில் இயக்கி வரும் முகநூல் பக்கத்தை இயக்கி வரும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைதள பக்கத்தில் அந்தப் பதிவை பகிர்ந்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர்
இதனை அடுத்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா என்பவர் தென் மண்டல துணை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் நங்கநல்லூரைச் சேர்ந்த பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் என தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ