சட்டபிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை நீதிமன்றக்காவலில் அனுப்ப முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து புனே செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநரின் தன் செயளாலம் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டுச்செல்லப்பட்ட அவர், தற்போது சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணையில் நக்கீரன் கோபால் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதி... "சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஆளுநரையோ, குடியரசுத் தலைவரையோ தடுத்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்கீரன் கோபால் அம்மாதிரியான நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபடவில்லை. அவரை நீதிமன்றக்காவலில் வைத்தால் தவறானது" என தெரிவத்த நீதிமன்றம் நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை நீதிமன்றக்காவலில் அனுப்ப இயலாது எனவும் தெரிவித்துள்ளது.