Chennai Gold Rate: நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம்
Gold Rate in Chennai: தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 5,325 ரூபாய்க்கும்; சவரன், 42 ஆயிரத்து, 600 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 74.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் சரி தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைந்ததே இல்லை. அந்த வகையில் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5682 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 45456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.42,600-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ 40 குறைந்துள்ளது. ஒரு கிராம் 5,325 க்கு விற்பனையான தங்கம் இன்று ரூ 5 குறைந்து 5,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிப்பு!
இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது, இதனால் ஒரு கிராம் 74 ரூபாய் 30 பைசாவாக வெள்ளி விலை உள்ளது. கிலோ 200 ரூபாய் குறைந்து கிலோ வெள்ளி விலை 74,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய தினத்தை பற்றி பேசுகையில், தங்கம் விலை கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 5,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 40 ரூபாய் சரிவடைந்து, 42 ஆயிரத்து, 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 காசு குறைந்து, 74.30 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்
இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தினை தங்கம் விலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமாடிட்டி நிபுணர்கள் , அமெரிக்க டாலரின் மதிப்பானது 7 மாத சரிவில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது. எனவே வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ