மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்களுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெ., அண்ணன் மகள் ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். 


இதேப்போன்று பிரியதர்ஷினி இயக்கத்தில் The Iron lady என்ற பெயரிலும் ஜெ. பயோபிக் படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்து வருகிறார்.


மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை வைத்து Queesn என்ற வெப் சீரிஸை இயக்குநர் கெளதம்மேனனும் இயக்குகிறார். அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிக்கிறார்.


இந்நிலையில்,  ஜெயலலிதாவின அண்ணன் மகளான ஜெ.தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கவில்லை என்கிற உத்தரவாதத்தை தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களிடம் அவர் கேட்டுள்ளார். 


இந்நிலையில் தற்போது குறித்து மூன்று இயக்குநர்களிடமும் ஜெயலலிதா கதையை குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி ஜெ.தீபாவின் கவனத்துக்கு மேற்படி இயக்குனர்கள் படங்களின் கதை அளித்து, அவரது ஒப்புதலை பெற்ற பின்னரே படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.