சென்னை: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மோசமான நிலையில் மாசடைந்துள்ளது என்றும் அது விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் விவசாயிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


மாசுபாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அந்த மனுவில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என அமித் ஷா விரும்புவதன் காரணம் என்ன? 


நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) இன்று தீர்ப்பளித்துள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 127 கோடி இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இந்தத் தீர்ப்பினால், திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். 


பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை எதிர்வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR