புதுடெல்லி: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவுக்கு இரட்டைச் சதம் அடித்து உதவ வேண்டும் என்று சேத்ஷ்வர் புஜாராவிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகல்-இரவு டெஸ்டாக Pink-Ball Test நடைபெறவிருக்கிறது. அதில் பூஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றிபெற உதவும் என்று சேத்தேஷ்வர் புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது கோரிக்கையையும் முன்வைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கடந்த காலங்களில் பல சாதனைகளையும் மைல்கற்களையும் கண்ட பின்னர், புதிதாக கட்டப்பட்ட மோட்டேரா மைதானத்தில் மூன்றாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளும். இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் மற்றொரு கவர்ச்சியான அம்சம் இடம் பெற்றுள்ளது.
ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
மோட்டேரா மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் போட்டி பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியாக நடைபெறும். இந்த சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் வெற்றியும் மூன்றாவது சிறப்பாக பதிவாக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார்.
“இந்த அரங்கம் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு (Javagal Srinath) மிகவும் மறக்கமுடியாதது. அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே மைதானத்தில், கபில் தேவ் ரிச்சர்டின் ஹாட்லீ விக்கெட்டுகளை முறியடித்தார். இதே மைதானத்தில் சுனில் கவாஸ்கர் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதே மைதானத்தில், சச்சின் டெண்டுல்கர் 18,000 ODI ரன்களை எட்டினார். இதே மைதானத்தில் தான், சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் காலடித் தடம் பதித்த 20வது ஆண்டை நிறைவு செய்தார். இதே மைதானத்தில் புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற உதவும்” என்று நரேந்திர மோடி மைதானத்தின் தொடக்க விழாவில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.
பூஜாரா கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாடியபோது, அவர் இரட்டை சதம் அடித்தார், வலது கை பேட்ஸ்மேனான புஜாரா மீண்டும் அந்த சாதனையை அடைய வேண்டும் என்று அமித் ஷா தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
Also Read | Beauty Queen: தலைமுடியைத் துறந்ததால், மகுடம் சூடிய நடன மயில்
முன்னதாக புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
2020 பிப்ரவரி 24ஆம் நாளன்று அமெரிக்காவின் அப்போதைய அதிபரானன டொனால்ட் டிரம்ப், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக மோட்டேரா ஸ்டேடியத்திற்கு வருகை தந்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, புதிதாக கட்டப்பட்ட மைதானம் இப்போது அதன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது.
ஜெய் ஷா (செயலாளர்), அருண் துமல் (இணைச் செயலாளர்), ராஜீவ் சுக்லா (துணைத் தலைவர்) உள்ளிட்ட பி.சி.சி.ஐ-இன் பொறுப்பாளர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைப் வரவேற்றனர்.
ALSO READ | வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR