வரும் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் இயங்கிவரும் உரிமம் பெறாத மசாஜ் நிலையங்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களது தொழிலில் காவல்துறையினர் தலையிட தடை விதிக்கக்கோரி பல்வேறு மசாஜ் நிலையங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த  புகார் மனுவின் விசாரணையில் இன்று இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக நடைப்பெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு, மசாஜ் நிலையங்களை நடத்த மாநில அரசின் தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும் எனவே, உரிமம் கோரி ஜூன் மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மசாஜ் நிலையங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தது.


இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மசாஜ் நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. 


மேலும் வரும் ஜூன் மாதம் வரை மசாஜ் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.