முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு  முன் ஜாமீன் வழங்க  சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் மீண்டும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை மீரா மிதுன் நடித்துள்ள படத்தின் பெயர் 'பேய காணோம்'. இந்த பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழு ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குனர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டி மார்ச் 16ம் தேதி மீரா மிதுன் ஆடியோ பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார். 


இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி தமிழ்ச்செல்வி என்கிற மீராமிதுன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூராக ஆடியோ பதிவிட்ட தினத்தில் மீரா மிதுன் ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்று இருந்ததாகவும், புகாரில் குறிப்பிட்டது போல் அவர் பேசவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும், உள்நோக்கத்துடன் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மீரா மிதுன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 


இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபலமானவர்கள் மீது அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிடுவதும் மீராமிதுனுக்கு வாடிக்கை என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், முதலமைச்சர் மீது அவதூறு பரப்பியுள்ளதால் மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


இதனை கேட்ட நீதிபதி இதேபோன்று மீரா மிதுன் எப்போது எதற்காக பேசினார் என்றும், இதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ளாரா என்றும் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் திரைத்துறையில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் முன்னேற்றைத்தை விமர்சித்து பேசிய புகாரில் மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் மீண்டும் முதலமைச்சரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டி வாதிட்டார். 


இதைத்தொடர்ந்து காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி முன் ஜாமீன் கோரி மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் அவரது பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | Meera Mithun Arrest Latest News: ஜாமீன் கேட்டு கதறும் மீரா மிதுன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR