Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 02:11 PM IST
Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை title=

Meera Mithun News: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் தான் தன்னை தானே சூப்பார் மாடல் என கூறும் மீரா மிதுன் (Meera Mitun). இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் கோபமடைந்த பிரபல ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் (Social Media) கடுமையாக வசைபாடி வருக்கின்றனர் நெட்டிசன்கள். 

மாடலிங் துறையிலிருந்து மீரா மிதுன் (Meera Mithun) தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்ச்சையான கருத்துக்கள் கூறுவதும், நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு கூறுவதும், அதனால் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல.

ALSO READ | Derogatory comments: நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

இதற்கிடையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மீரா மிதுன் போலீசில் ஆஜராகாத நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிகிறது.

ALSO READ | என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News