சிம்பு பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை
சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட படங்களை தயாரித்த எல்ரெட் குமார் உள்ளிட்டோரின் வீடுகளின் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக குவாரி அதிபர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் தொடங்கிய இந்த சோதனையில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான தொழிலதிபர் ஏ.வி சாரதி என்பவர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான குவாரி மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க | பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு
அதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்த அவருக்கு சொந்தமான சென்னை, ராணிப்பேட்டையில் உள்ள அலுவலங்களில் பல்வேறு குழுக்களாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 15 கார்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் வந்திறங்கிய அதிகாரிகள், குவாரி, சிமெண்ட் குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பெரியமேடு, புரசைவாக்கம், மேடவாக்கம், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
புரசைவாக்கத்தில் உள்ள பைனான்சியர் சுரேஷ் லால்வானி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரத்தில் வசிக்கும் சினிமா தயாரிப்பாளரும், கல்குவாரி அதிபருமான எல்ரெட் குமார் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இவர் கோ மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஜேகே குவாரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக குவாரி தொழில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிக்கரணை, ஈச்சங்காடு, எருமையூர் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமாக இருக்கும் இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க | நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்; சேலம் நீதிமன்றத்தில் பரபரப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR