சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து,  கல்வித் தலைவர்களின் ஒன்பதாவது வட்டமேசை விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், துணைவேந்தர்கள், அதிபர்கள், இயக்குநர்கள் மற்றும் டீன்கள் போன்ற முக்கியப் பிரமுகர்கள் உட்பட சுமார் 50 கல்வித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டுச் சூழலை பங்கேற்பாளர்கள் தங்கள் நிபுணத்துவம், நுண்ணறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்ட ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | '40ல் ஒன்னு கூட குறையக்கூடாது' அசைன்மென்டை தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


குறிப்பாக நமது நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான செயல் உத்திகளைக் கண்டறியும் விதத்தில் அமைந்த இந்த கலந்துரையாடல்  மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்திற்கு வழி வகிப்பது போல் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சி வாய்ப்புகள், ஆசிரியப் பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரையிலான தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. பெறப்பட்ட மதிப்புமிக்க பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான முன்மொழிவை உருவாக்கி ,கல்வித் துறையில் நேர்மறையான மாற்றங்களை வளர்க்க இந்த முன்மொழிவு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிகளின் தலைவர் P.ஸ்ரீராம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பாக உள்ளது.இந்த சூழலில் கல்வியின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது? மாணவர்களின் கல்வி கற்பித்தல் மற்றும் கற்றலில் இருக்கின்ற பிரச்சனைகள் என்ன? கல்வியாளர்களாக கல்வி நிலையங்கள் எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பேசினோம். எப்படி மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எப்படி மாணவர்களை கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்களையும் தீர்வுகளையும் அனைத்து கல்வியாளர்களும் முன்வைத்தார்கள்.



கடந்த வருடத்தை விட இந்த வருடம் இன்ஜினியரிங் கல்லூரிகளின் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருக்கும். கடந்த வருடத்தை விட இந்த வருடம் 50 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக தான் சேருவார்கள். ஏனென்றால் இன்ஜினியரிங் கல்லூரி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் தமிழக அரசு மற்றும் யூனிவர்சிட்டி கல்வி முறைகளில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். இந்த மாற்றங்களினால் திரும்பவும் இன்ஜினியரிங் படிக்கலாம் இன்ஜினியரிங் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறோம். அதனுடைய வெற்றியை வருகின்ற காலங்களில் பார்க்கலாம். தமிழக அரசின் முயற்சியால் நிறைய தொழில்கள் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சியால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.


மேலும் படிக்க | தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல தமிழ்நாடு - முதலமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ