அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. கடந்த முறை தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் கைப்பற்றிய திமுக, இம்முறை அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்கான அனைத்து அமைச்சர்களுக்கும் குறிப்பிட்ட மாவட்டங்கள் ஒதுகீட்டு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அம்மாவட்டத்தில் நடைபெற்ற கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், " நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து மாற்றப்பட்டு தற்போது மீண்டும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். எப்போதும் நெல்லை மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஆதலால் தான் கீழடி போன்று பொருநை நாகரிகத்தை உலகறியச் செய்யும் வகையில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நெல்லையில் அமைக்கிறோம். இந்த பணி முடிந்து முதல்வர் கையால் திறக்க வைக்க வேண்டும் என்பதற்காக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபோது முதல்வரிடம் தொல்லியல் துறை என்னிடமே இருக்கட்டும் என கேட்டு பெற்றுள்ளேன்.
பண்டிச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது . கடந்தமுறை 40-க்கு 40 என்பதில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் பெறவேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக நெல்லை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்ற பெருமையை பெற்றுத்தர வேண்டும். ராமநாதபுரத்தில் வரும் 17- ந்தேதி நடக்கும் பாகமுகவர்கள் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 1484 முகவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
அதுபோன்று அடுத்தநாள் 18- ந்தேதி நடக்கும் மீனவர்கள் மாநாட்டிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் உன்னத தலைவர், அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் , பன்முகத்தன்மையோடு விளங்க கூடிய நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும், இந்த விழாவின் மூலம் திமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ