சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் டில்லி. இவரது மனைவி சரிதா. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் காதல் மனைவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசுவதை அறிந்த கணவன் டில்லி, பலமுறை சரிதாவை எச்சரித்துள்ளார். ஆண் நண்பரிடம் பேசியதை செல்போனில் தானாக ரெக்கார்ட் ஆகும்படி செய்து அதை காண்பித்தும் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு நான் பேச மாட்டேன் என்று கூறிய மனைவி தொடர்ந்து அவருடைய ஆண் நண்பரிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு கணவன் உறங்கிவிட்டான் என்று நினைத்துக் கொண்ட அவருடைய மனைவி சரிதா செல்போனில் அவரது ஆண் நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதை பார்த்த அவரது கணவன் டில்லி ஆத்திரமடைந்து மனைவியை சரமாரி அடித்துள்ளார். கண்மூடித்தனமாக மனைவியை அடித்த கணவன் இரவு உறங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி சுயநினைவை இழுந்து இருந்ததால் மனைவியை மீட்டு கண்ணகி நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சரிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த மனைவி சரிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



மேலும் படிக்க | சகோதரியை துண்டுத்துண்டாக வெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


இதற்கிடையே, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சரிதாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து  டில்லியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சரிதாவை கொலை செய்ததை டில்லி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 


மேலும் படிக்க | சென்னையில் அரங்கேறிய சாத்தான்குளம் சம்பவம்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR