தன்னிடம் பாசம் காட்டும் தன்னுடைய வளர்ப்பு நாய்க்காக எஜமான் செய்த சொகுசு செயல் வைரலாகி வருகிறது. ரூ. 25 ஆயிரம் செலவில் ஆன்லைன் மூலம் ஜெர்மனியில் இருந்து குட்டி வண்டி வரவழைத்து ராஜா, ராணி போல அமரவைத்து தனது சைக்கிளுடன் இணைத்து இ.சி.ஆர். சாலையில் சைக்கிளிங் அழைத்து செல்லும் எஜமான் செயல் அனைவரையும் வியக்க வைத்தது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் புகுதியில் வசித்து வரும் 52-வயதான ஹரி.  இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பணியாளராக வேலை செய்து வருகிறார்.  கைநிறைய சம்பளம், அழகான குடும்பம் என வாழ்ந்து வரும் ஹாரி மனைவி சீத்தல் ஒரு பள்ளி ஆசிரியை, ஒரே மகள் ஆதிரா, நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜாலியா போட்டோவுக்கு போஸ் குடுக்க உங்களுக்கு நேரம் இருக்கா?



வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் கொண்ட ஐடி ஊழியர் ஹரி தனது வீட்டில் குட்டியிலிருந்து "ரூபி" என்ற நாயை பாசமுடன் வளர்த்து வருகிறார்.  ஹரியிடமும் அவரது மகளிடமும் அளவற்ற பாசம் காட்டும் அந்த நன்றியுள்ள பிராணி ரூபியை (நாய்) வெளியூர் சென்றால் கூட உடன் அழைத்து சென்றுவிடுவார்களாம் ரூபி மீது பாசம் கொண்ட தம்பதிகள்.  ஒரு நாள் கூட ஹரியும், அவரது மகள் ஆதிராவும் வளர்ப்பு நாய் குட்டியான ரூபியை விட்டு பிரிந்தது கிடையாதாம். அந்தவிற்கு அதன் மீது இரவரும் அளவற்ற பாசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் தன் வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் வருவது வழக்கமாக கொண்டுள்ளார். தனது செல்லபிராணி ரூபியை சைக்கிளில் அழைத்து வருவது பெரும் சவாலாக இருந்தது. 


வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இசிஆர் சாலையில் தனது சைக்கிளின் பின் பக்க சீட்டில் உட்கார வைத்து அழைத்து வரும் போது எங்காவது கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுமோ என்ற பயத்துடன் ஒவ்வொரு முறையும் ரூபியை பதற்றத்திலே அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு ஜெர்மன் நாட்டு குரும்படத்தில் அங்கு சைக்கிளிங் செய்பவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வண்டியை சைக்கிளுடன் இணைத்து அவரகள் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயை சைக்கிளிங் அழைத்து செல்வதை அந்த படத்தில் பார்த்துள்ளனர்.  பிறகு ஜெர்மன் நாட்டு ஆன்லைனின் அந்த பிரத்யேக வண்டியை தனது நாய்க்கு வாங்குதற்கு தேடியபோது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அந்த வண்டியை விற்பனை செய்வதை அறிந்த ஹரி தனது செல்ல பிராணி ரூபிக்காக உடனடியாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி ஆன்லைன் மூலம் ஜெர்மனியில் இருந்து அந்த சொகுசு வண்டியை தமிழகத்திற்கு வரவழைத்துள்ளார்.



பிறகு தனது சைக்கிளுடன் மழை, வெயில் படாதவாறு இரு சக்கரங்களுடன் தயாரிக்கப்பட்ட அந்த சொகுசு வண்டியை இணைத்து ராஜா, ராணியை சாரட் வண்டியில் சுமந்து வரும் சாரதிபோல், தனது செல்ல பிராணியை அந்த வண்டியில் படுக்க வைத்து தான் ஒரு சாரதியாக மாறி சைக்கிளிங் அழைத்து உலா வருகிறார் ஐடி ஊழியர் ஹரி.. சைக்கிளிங் வரும் போது வழியில் அசதி ஏற்பட்டாலும் தாங்கள் 3 பேரும் தேனீர் அருந்தும்போது ரூபிக்கும் பால், பிஸ்கட் கொடுத்து தங்கள் குழந்தை போல் அதன் மீது அளவற்ற பாசமழை பொழிந்து அதனை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்கின்றனர் இந்த தம்பதிகள். வாரந்தோறும் இசிஆர் சாலையில் சைக்கிளிங் செய்பவர்கள் பலர் ஒரு சாரதி போல் தனது வளர்ப்பு பிராணியான ரூபியை சுமந்து தூசி தும்பு படாமல் பிரத்யேக தயாரிப்பு வண்டியில் சைக்கிளிங் அழைத்து வரும் ஹரியின் நன்றியுணர்வு, பாசபினைப்பினை கண்டு மெயிசிலிர்த்து பாராட்டுவதை பார்க்கும் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்.  வளர்ப்பு பிராணிக்காக ஜெர்மனியில் இருந்து சொகுசு வண்டி வரவைத்து ரூபியை தங்களுடன் சைக்கிளிங் அழைத்து செல்லும் தம்பதிகள் வளர்ப்பு பிராணி மீது வைத்துள்ள பாசம் சொல்லி தெரிய வேண்டியதில்லை என்பது காட்சியே ஒரு பெரிய உதாரணம்.


மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ