இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

Manchurian Viral Video: 500 கிலோ எடையுள்ள மஞ்சூரியன் தயாரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ கண்ட உணவுப் பிரியர்களை பதற வைத்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 9, 2023, 03:47 PM IST
  • தொழிற்சாலையில் மஞ்சூரியன் எப்படி தயாரிக்கப்படுகிறது?
  • இன்றைய வைரல் வீடியோ.
  • உணவு பிரியர்களுக்கு ஷாக் தரும் வைரல் வீடியோ.
இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க title=

இன்றைய வைரல் வீடியோ: இந்தோ சைனீஸ் உணவுப் பிரியர்களு மஞ்சூரியன் மிகவும் பிடித்த உணவாகும். இந்த ருசியான பந்துகள் தனித்துவமான சுவையை வழங்குகின்றன. இந்த சீன உணவை வீட்டில் தயாரிக்க முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், மாவு, உப்பு மற்றும் எண்ணெய் போன்ற எளிய பொருட்கள் இருந்தால் மட்டும் போதும். இதை எளிதாக வீட்டிலேயே சமைக்கலாம். எனினும், நம்மில் பலர் வெளியில் தான் இதை வாங்கி சாப்பிட விரும்பிக்கிறோம். அதுவும் ரோட்டு கடை ஓரம் விற்பனை செய்யப்படும் மஞ்சூரியனில் தனி டேஸ்ட் ஆ இருக்கிறது என்று கூறலாம். ரோட்டு கடை ஓரம் மஞ்சூரியன் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் சுவையாக இருந்தாலும், அதன் ஆரோக்கியமான பக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், தொழிற்சாலைகள் அதிக அளவில் தின்பண்டங்களைத் தயாரிக்கும் பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி வருகிறது. 500 கிலோ எடையுள்ள மஞ்சூரியன் தயாரிப்பின் இந்த கிளிப் இணையத்தின் கவனத்தை ஈர்க்கும் சமீபத்திய கிளிப் ஆகும். இந்த வீடியோ உணவு பிரியர்களை வியக்க வைத்துள்ளது. 

ஒரு கட்டிங் போர்டில் கிலோ கணக்கில் முட்டைக்கோஸை நறுக்கும் ஆண்கள் குழுவுடன் வீடியோ தொடங்குகிறது. அவர்கள் பெரிய அளவிலான கத்திகளைப் பயன்படுத்தி காய்கறிகளை பெரிய வெட்டுகிறார்கள், அவற்றில் சில காய்கறிகள் தரையில் விழுகின்றன. அடுத்து, நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ் ஒரு நீல பெட்டியில் கவனமாக வைக்கப்பட்டு, சிறிது உப்பு மற்றும் மைதா மாவுடன் ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்படுகிறது. மூன்று பொருட்களும் நன்கு கலக்கப்பட்டு, தடிமனான பேஸ்ட்டை உருவாக்குகின்றன. குறிப்பாக கலவை செயல்முறையின் போது, ​​தொழிலாளர்கள் மஞ்சூரியன் கலவையை கிளவுஸ் அணியாமல் வெறும் கைகளால் பிசைகிறார்கள். பேஸ்ட் சரியான பதத்தை அடைந்தவுடன், அதை ஒரு உருண்டையாக வடிவமைத்து, ஒரு பெரிய பாத்திரத்தில் பொரித்து எடுக்கிறார்கள். பின்னர் அந்த சமைத்த மஞ்சூரியன் பந்துகள் தொட்டியில் வைக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | அழகிப்போட்டியில் ஜெயித்தா எப்படி இருக்கும்? வீடியோ வைரல்

தொழிற்சாலையில் மஞ்சூரியன் தயாரிக்கப்படும் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் கருத்துப் பிரிவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

வீட்டில் மஞ்சூரியன் செய்து சாப்பிடுங்கள்:
எனவே இது போன்ற தரமில்லாத மஞ்சூரியன் வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இனி வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இப்போது வீட்டில் எவ்வாறு சுவையாக மஞ்சூரியன் செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ், கேரட்,  வெங்காயம் - ஒன்று
மைதா மாவு – 3 ஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு பல் – 5
பச்சை மிளகாய் – 1
டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன்
சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்.

செய்முறை:
முதலில் காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் மிளகாய்த்தூள் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். வாசத்திற்கு அரை ஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா சேர்த்து இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் போண்டா உருட்டுவது போல சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து உருண்டை பிடியுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். பின்னர் அடுப்பை மீடியமாக வைத்து உருண்டைகளாக போட்டு எல்லா பக்கமும் சிவக்க வறுத்து எடுங்கள். 

மேலும் படிக்க | ஜாலியா போட்டோவுக்கு போஸ் குடுக்க உங்களுக்கு நேரம் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News