புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்..
"தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்; நாளை வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது; தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை, எனினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
எனவே, 18-ஆம் தேதி(இன்று) தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். 19-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்!