WOW..! 3 நாட்களுக்கு மழை: இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!
வெப்பச்சலனத்தால் தமிழகத்தால் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனத்தால் தமிழகத்தால் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!
தென்மேற்கு பருவமழை காலம் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவித்துள்ளது.