கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் தற்போது, வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 மூதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிகையாக இருப்பது நல்லது.