வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை அடுத்த 15 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...! 


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மற்றும் வட மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. 


காற்று வீசும் திசையில் இருந்து ஏற்படக்கூடிய மாற்றம், வெப்பம் ஆகியவற்றின் காரணமாக 9ஆம் தேதியான இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை முதலில் உள்மாவட்டங்களில் நண்பகல் அல்லது மாலையில் தொடங்கி இரவில் தீவிரமாகும்.


தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.