Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹிப்ஹாப் தமிழா இசை கச்சேரிக்கு புக் செய்தால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. ரசிகர்கள் அந்த டிக்கெட்டை வைத்து இரண்டு முறை சென்று வர முடியும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "HipHop Tamizha Return of the Dragon Machi!" நிகழ்விற்கு M/s GSS Torque Entertainment LLP நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக QR பயணச்சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

​நந்தனம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் உள்ள YMCA மைதானத்தில் 19.10.2024 அன்று நடைபெறவுள்ள "HipHop Tamizha Return of the Dragon Machi! நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், "M/s GSS Torque Entertainment LLP" உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.


மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்


​"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன் பதிவுசெய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குசென்று திரும்ப முடியும்.


​நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட் உடன் வழங்கப்பட்டுள்ள Metro Pass-யை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.


​நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 00:15 மணிக்கும், விமானநிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 00:30 மணிக்கும் புறப்படும். பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் வழித்தட மாற்றம் செய்து கொள்ளலாம்." என கூறியுள்ளது.


மேலும் படிக்க | உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இனி பட்டனை தட்டுங்க போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ