Budget 2021: சென்னை வாசிகளுக்கு நற்செய்தி: Chennai Metro-வுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே` திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை: சென்னை வாசிகளுக்கு நற்செய்தி!! சென்னை மெட்ரோவுக்காக ரூ .63,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மத்திய பட்ஜெட் 2021 உரையில் அறிவித்தார். சென்னையில் தினசரி பயணிகளுக்கு மிகப்பெரிய செய்தியை அளித்த நிர்மலா சீதாராமன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டார். சென்னை மெட்ரோவுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்தும்.
இதற்கிடையில், உள்கட்டமைப்பு துறைக்கு ரூ .20,000 கோடி நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார் நிதி அமைச்சர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
"இந்திய ரயில்வே 2030 ஆம் ஆண்டிற்கான தேசிய இரயில் திட்டத்தைக் கொண்டுள்ளது. டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் அடுத்த கட்ட விமான நிலையங்காள் தனியார்மயமாக்கப்படும்” என்று நிதி அமைச்சர் சீதாராமன் கூறினார்.
2020 ஆம் ஆண்டில், சீதாராமன் தலைமையிலான நிதி அமைச்சகம் ரூ .70,250 கோடிக்கான மொத்த பட்ஜெட் ஆதரவை (GBS) ஒதுக்கியது.
ALSO READ: Budget 2021-22 LIVE: கோவிட் -19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடியை அறிவித்த நிதியமைச்சர்
தேஜஸ் எக்ஸ்பிரஸ் போன்ற தனியார் ரயில்கள், வைஃபை வசதிகள், சுற்றுலா தளங்களுடன் சிறந்த இணைப்பு, ரயில் நெட்வொர்க்கின் எரிபொருளாக சூரிய சக்தி திறன் உள்ளிட்ட அறிவிப்புகளுடன் ரயில்வே துறையை புதுப்பிக்க மத்திய பட்ஜெட் கடந்த ஆண்டு கவனம் செலுத்தியது.
அழிந்துபோகக்கூடிய பொருட்களை விரைவாக கொண்டு செல்லக்கூடிய வகையில், 2019 ஆம் ஆண்டில் ரயில்வே துறைக்கு அறிவிக்கப்பட்ட பிபிபி (பொது-தனியார் கூட்டு) மாதிரி மூலம் கிசான் ரெயிலை இந்திய ரயில்வே அமைத்தது. அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தையும் மோடி அரசு (Modi Government) அறிவித்தது, இருப்பினும், இந்த திட்டம் தொற்றுநோயால் தடம் புரண்டது. ஆனால் இப்போது மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன.
COVID-19 தொற்றுநோயால், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக மத்திய பட்ஜெட் காகிதமில்லாத முறையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட் நிதி அமைச்சகத்தின் ஹவுஸ் பிரஸ்ஸில் அச்சிடப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் பட்ஜெட் (Budget) நாளில் ஆவணங்கள் அச்சிடப்பட்டு, சீல் செய்யப்பட்டு, பட்ஜெட் வழங்கப்படும் வரை கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இந்த ஆவண முரை தவிர்க்கப்பட்டது.
ALSO READ: Budget 2021: நிதி அமைச்சரின் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் Middle Class
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR