சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தங்களது சேவையை விரிவு படுத்தும் நோக்கில் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதை கேள்விப்பட்டவர்கள் இது நல்லா இருக்கே என கூறிவருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அழைப்பிதழ் இருந்தால் டிக்கெட்டே வேண்டாம்…


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம். மெட்ரோ இரயில் நிர்வாகம் தங்களது சேவைகளை எளிதாக்கும் நோக்கில் இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி,  மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு மொத்த QR பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | திருமண நிச்சயதார்த்தத்தில் பாயாசத்திற்கு சண்டை!


கூடுதல் கட்டணம் இல்லை..


மெட்ரோ ரயில் நிருவனத்தின் இந்த புதுமையான முயற்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ இரயிலின் அச்சிடப்பட்ட QR குறியீடுகள் போடப்பட்ட பயணச்சீட்டை வழங்குகிறது. இதன் மூலம் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்வித கட்டணமுமின்றி மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்.


சேவை தொடங்கியது..


முதன் முயற்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜீஃபோ டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிஃபோ டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெற்ற பணியாளர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மூலம் இதனை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிகைகளில் முன்பதிவு செய்யப்பட்ட 5,000 QR குறியீடு பயணச்சீட்டுகளை அச்சிட்டுள்ளது. இந்த முயற்சி, நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கியது. அது மட்டுமன்றி, அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லவும் வசதியாக இருந்தது.


இந்த புதிய முன்பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது மெட்ரோ பயணச்சீட்டில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக சில அரசியல் நிபுனர்களும் தொழிலதிபர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பம், வசதி மற்றும் பொது மக்களின் நலனுக்காக இந்த முயற்சியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.


சென்னைவாசிகள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளிக்கு ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்த புதுமையான தீர்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் மூலம் மொத்த முன்பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, வசதியான மற்றும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதியினை பயணிகளுக்கு வழங்குகிறது.


முன்பதிவு செய்வது எப்படி? 


மேற்கூறியதன்படி, மொத்தமாக QR பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தியது அல்ல. பொதுமக்களும் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மொத்தமாக QR பயணச்சீட்டு பெற முன்பதிவு செய்வதற்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் வழிவகுக்க இருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் Imc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பும் ஆளுநர்? மத்திய அரசின் ஆதாரத்தையே காட்டி அமைச்சர் பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ