தமிழ் நாடு செய்திகள்: உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்தும் மற்றும் தமிழக கல்வி நிலை குறித்தும் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் பேச்சு மட்டுமின்றி சமீப காலமாக ஆளுநரின் பேச்சுக்கள் அவர் முழு அரசியல்வாதி போலவே உள்ளன. தமிழக ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டை தமிழகம் என அவர் மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் திராவிட நாடு என கிடையாது என அதற்கு எதிராக அவரது பேச்சுக்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக இருந்து வந்தது போல, தற்போது தொழில் முதலீடுகளை இருப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்களை மறைமுகமாக சாட்டியிருப்பது போல் அவரது பேச்சுக்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க - 'ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்' - மரண ஓலத்தை கண்ட தமிழர் சோகம்!
தமிழகத்தில் கல்வியின் தரம் சரியல்ல என குற்றம் சாட்டி வரும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன எனவும் சிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் நிதி ஆயோக் வெளியீட்டுல அறிக்கையில் கூட தமிழகத்தில் சிறந்த கல்வி தரம் இருப்பதாகவும் மேலும் மேற்கண்ட பட்டியலில் தமிழகம் முன்னணி இடம் வகிப்பதற்கு தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் காரணம் எனத் தெரிவித்தார் இவற்றை மறைப்பது போல தமிழக ஆளுநர் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்
வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார்..? பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். சீனா, ஜப்பான் தைவான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார்.
மேலும் படிக்க - உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிசாவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார் - ஜெயக்குமார்
ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும்.
முதலீட்டுக்கு ஊகந்த சூழல் தமிழகத்தில் நிலவுவதாலும் அனைத்து தரவுகளில் அடிப்படையிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும் முதலீடு செய்ய வரக்கூடிய நிறுவனங்கள் தமிழகத்தை விரும்புகின்றன என தெரிவித்தார்.
தமிழகத்தில் வரக்கூடிய பெரு நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற மனித வளம் மற்றும் திறன்கள் இங்கு உள்ள இளைஞர்களிடம் இருப்பதால் மட்டுமே அவர்கள் தமிழகம் வருவதாகவும் தெரிவித்தார். அரசியலுக்கு செல்ல விருப்பம் இருந்தால் தமிழக ஆளுநர் அதற்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தக்கூடாது எனவும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வரவேண்டும் என தெரிவித்தார்
மேலும் படிக்க - ”ஒடிசா ரயில் விபத்தில் தவறிழைத்தவர்களைக் காப்பாற்ற முயலவில்லை”-வானதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ